ETV Bharat / state

தி.மலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தாா் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

author img

By

Published : Mar 25, 2019, 11:41 PM IST

நாடாளுமன்றத்தேர்தல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் உடனிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,

நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணி இன்னும் வேகப்படுத்தபட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

நம்முடைய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் யானை இல்லை என்ற குறை இருக்கிறது என்று பக்தர்கள் கூறினர். தேர்தல் முடிந்தவுடன் ஆலயத்தில் எனது சொந்த செலவில் ஒரு யானை வாங்கிக் கொடுக்க நான் முடிவு செய்துவிட்டேன். திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஏற்கனவே நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால் முதலமைச்சர் உடனடியாக அதை அறிவிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் மூலமாக திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க உரிய நடவடிக்கைகளை நாங்கள் அனைவரும் சேர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறினார்.


Intro:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.


Body:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறிவித்த தினத்திலிருந்து அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவருடைய ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று, அனைத்து சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு இன்று முதல் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் அத்தனை கழக கூட்டணிக் கட்சிகள் நிர்வாக பெருமக்களும் கழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளர் அவர்களை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகளை பெற முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,

நிச்சயமாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும் .

திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான பணி இன்னும் வேகப்படுத்த பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. அந்த பணியை பொதுமக்களுடைய நல்ல ஆதரவோடு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கான முக்கியத்துவத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அந்த பணியை உடனடியாக மேற்கொண்டு பொதுமக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தான் உறுதுணையாக இருப்பேன்.

அதேபோல் நம்முடைய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் யானை இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது என்று பக்தர்கள் சொன்னார்கள். உடனடியாக அந்த யானையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மூலமாக உடனடியாக அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு தேர்தல் முடிந்தவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் எனது சொந்த செலவில் ஒரு யானை வாங்கிக் கொடுக்க நான் முடிவு செய்து விட்டேன் .

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஏற்கனவே நாங்கள் கொடுத்திருக்கிறோம் .

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்ற காரணத்தினால் முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அதை அறிவிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்றத்திலேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மூலமாக திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க உரிய நடவடிக்கைகளை நாங்கள் அனைவரும் சேர்ந்து மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.






Conclusion:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.