ETV Bharat / state

அமைச்சர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

author img

By

Published : Mar 21, 2019, 11:44 AM IST

agri

திருவண்ணாமலை: கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில விவசாயப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து கட்சி செயல்வீரர்களும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Intro:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அறிமுக கூட்டம் திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


Body:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அறிமுக கூட்டம் திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில விவசாயப்பிரிவு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் .

இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அண்ணா சிலை, பெரியார் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கூட்டணிக் பாஜக , பாமக , தேமுதிக ஆகிய கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக தங்கள் இருசக்கர வாகனத்தில் கொடிகளை கட்டி கொண்டு பேரணியாக வாக்கு சேகரிக்க சென்றனர்.

பின்னர் வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக பாஜக தேமுதிக தமாகா தொண்டர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது,

பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிமுக அரசு சிறப்பான முறையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செய்து கொடுத்திருக்கிறது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து கட்சி செயல்வீரர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசும்போது நான் தொண்டனாக இருந்து இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். எனவே அனைத்து தொண்டர்களும் உங்களுடைய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். உங்கள் பிரச்சனைகளை நான் தீர்த்து வைப்பதற்கு பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

மேலும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாலை கீழ்பெண்ணாத்தூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக கூட்டணி கட்சி செயல் வீரர்களுடன் வேட்பாளர் அறிமுக கூட்டம் கீழ்பெண்ணாத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நாளை செங்கம் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த செயல் வீரர்களுடன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Conclusion:திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அனைத்துக் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அறிமுக கூட்டம் திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.