ETV Bharat / state

பிரபல தனியார் உணவக சாம்பார் இட்லியில் மிதந்த புழு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 12:22 PM IST

a worm in the food ordered at hotel
பிரபல தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த சாம்பார் இட்லியில் கிடந்த புழு

A worm in the food ordered at hotel: திருவண்ணாமலையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சாம்பார் இட்லியில் புழு இருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த சாம்பார் இட்லியில் மிதந்த புழு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை : வேங்கிக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது, பிரபல தனியார் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சச்சின் (25) மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் (26) ஆகியோர் இரவு உணவு உண்பதற்காகச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த ஹோட்டலில் அமர்ந்து சாம்பார் இட்லி 2 ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆர்டரின் பெயரில் ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட சாம்பார் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுது, சாம்பாரில் இருந்து வெளியே வந்த புழுவைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து, ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

அப்பொழுது நாங்களும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்தான், அமைதியாக சென்று விடுங்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியதுடன் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல் துறையினர், உணவு ஆர்டர் செய்த சச்சின் மற்றும் வெங்கடேசனிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் வாந்தி எடுத்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற பொழுது உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு முறையான பதில்களை கூறாமல், மிரட்டும் தொணியில் உணவக ஊழியர்கள் பேசியது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை என்றும், விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "4 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளை சேமிக்க நடவடிக்கை" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.