ETV Bharat / state

கந்துவட்டி பிரச்னை: திருவண்ணாமலை ஒருவர் கொலை.. நான்கு பேர் கைது!

author img

By

Published : May 30, 2023, 10:59 PM IST

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை கந்துவட்டி கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஒருவரை நான்குபேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தேவனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அருள் குமார் (370. இரண்டு முறை திருமணமாகி அவர்களை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது மூன்றாவது ஒரு பெண்ணுடன் வசித்து இவர் வசித்து வந்தார். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். கூடவே கந்து வட்டிக்கு பணம் கொடுத்தும், பணம் வாங்கியும் பைனான்ஸ் வேலையும் செய்து வந்துள்ளார்.

இதையும் படிங்க:'எந்திரன்' படபாணியில் புளுடூத் மூலம் தேர்வு எழுதியவர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் தனது ஆதனூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை, ஆதனூர் கூட்டுச்சாலையில் வரும்போது 4 மர்ம நபர்கள் அருள் குமாரை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளதில் கிடந்த அருள்குமார் சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த தச்சம்பட்டு காவல்துறையின சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட அருள் குமாரின் உடலை கைப்பற்றிய போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:Dhoni Fans: CSK வெற்றியை கொண்டாடும் தீவிர தோனி ரசிகர்.. ஆட்டோவில் இலவச சவாரி..!

இந்த சம்பவம் தொடர்பாக, அருள்குமார் அண்ணன் சௌந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், கள்ளக்குறிச்சி மாவட்டம் முருகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாமலை வாசன், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, மற்றும் குருமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:vellore Baby Death:வேலூரில் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; அல்லேரி மலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? அமைச்சர் பதிலென்ன..?

இந்த விசாரணையில் அருள்குமார் மற்றும் கைதான நபர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் என்ற முறையில் கந்துவட்டி தகராறு அடிக்கடி நிலவி வந்ததாகவும், இதன் அடிப்படையில் நேற்று இரவு நான்கு பேரும் அறிவாளால் அருள்குமாரை வெட்டிக் கொன்றதாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒம்ரான் ஹெல்த்கேர் தொழிற்சாலை - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.