ஆவடி காவல் ஆணையரகத்திற்கு புதிதாக இரண்டு நாய்க்குட்டிகள் வருகை!

author img

By

Published : May 14, 2022, 12:47 PM IST

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு புதிதாக இரண்டு நாய்க்குட்டிகள் வருகை!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு புதிதாக இரண்டு நாய்க்குட்டிகள் வந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவடி: சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவான ஆவடி காவல் ஆணையரகம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி காவல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இதன் கீழ் 25 காவல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்தக் காவல் ஆணையரகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வெடிகுண்டு வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் டோனி, பீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் கடந்த 4 ஆம் தேதி வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் டாபர்மேன், லாப்ரடர் வகையைச் சேர்ந்த இரு நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவைகளுக்கு டாபி, ப்பின் என ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெயர் சூட்டியுள்ளார். இனி, இந்த நாய் குட்டிகள் வளர்ந்து வரும் ஆவடி காவல் ஆணையரக குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கவுள்ளது.

மேலும் இந்த டாபி, ப்பின் என்ற இரண்டு புதிய நாய்க்குட்டிகளுக்கு 4 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்படும். இதனையடுத்து, குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய சிறப்பு பயிற்சிக்காக கோவை காவல் ஆணையரகத்திற்கு இந்த இரண்டு நாய்க்குட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூனியம் எடுப்பதாக கூறி நகை பணம் மோசடி - சாமியார் வேடமிட்ட 2 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.