ETV Bharat / state

முன் அறிவிப்பின்றி திருத்தணி முருகன் கோயில் அடைப்பு: பக்தர்கள் ஏமாற்றம்

author img

By

Published : Jul 31, 2021, 6:41 PM IST

temple
temple

திருத்தணி முருகன் கோயிலில் முன் அறிவிப்பின்றி பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருவள்ளூர்: திருத்தணியில் முருகனின் ஐந்தாம்படை வீடாகச் சிறந்து விளங்கும் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நாளை (ஆகஸ்ட் 1) தொடங்க உள்ளது.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

பக்தர்களின் வருகையால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்ற இடர் நிலவியது. இதனையடுத்து இந்து அறநிலைத் துறை உத்தரவின்பேரில் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இன்றுமுதல் (ஜூலை 31) ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை ஐந்து நாள்கள் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மூலவருக்குச் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். மலைக்கோயில் காவடி மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் உற்சவர் தெப்ப வைபவம் நடைபெறும். திருக்கோயில் அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள் மட்டும் மலைக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடிக்கிருத்திகை விழாவில் உற்சவர் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக பூஜைகளை பக்தர்கள் நேரடியாக திருக்கோயிலுக்குச் சொந்தமான யூ-ட்யூப் சேனலில் கண்டு களிக்கலாம் என இந்து அறநிலைத் துறை தெரிவித்துள்ளது.

முன் அறிவிப்பின்றி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.