'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!
Updated on: Jan 24, 2023, 4:17 PM IST

'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!
Updated on: Jan 24, 2023, 4:17 PM IST
மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறும் இடத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். அப்போது சேர் எடுத்துவர தாமதித்த கட்சி நிர்வாகி மீது அமைச்சர் ஆவேசமாக கல் வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: ஆட்சியர் அலுவலகம் அருகே ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் நாளை(25.01.2023) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தியாகிகளின் வீரவணக்க நாள் பொது கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்சிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அந்த இடத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திமுக நிர்வாகிகளுடன் விழா ஏற்பாடுகள், மேடை அமைக்கும் பணிகள், பொது மக்கள் அமரும் இடங்கள் என அவர் ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் அமர இருக்கைகள் எடுத்து வர ஒருவரை அழைத்த போது அவர் அவரை கண்டுகொள்ளாமல் இருந்ததால், ஆவேசமடைந்த அமைச்சர் நாசர் அவர் மீது கல் வீசிய வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 74th republic day: காமராஜர் சாலையில் களைகட்டிய குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!
