ETV Bharat / state

பூண்டி பூங்காக்களுக்கு விடிவு வருமா?

author img

By

Published : Feb 6, 2020, 3:31 PM IST

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பூங்காக்களும் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் பூங்காக்களுக்கு விடிவு வருமா? என இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

POONDI SATHYAMOORTHI WATER RESERVOIR PARK DAMAGE
POONDI SATHYAMOORTHI WATER RESERVOIR PARK DAMAGE

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பூங்காக்கள் சிதிலமடைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த பூங்காக்கள் குடிமக்களின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது என சுற்றுலாப் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பூண்டி ஏரியை பராமரித்து வரும் பொதுப்பணித் துறை அதிகாரி கருத்து தெரிவித்தபோது, நீர்த்தேக்கம், நீர்பிடிப்பு பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சிதிலம் அடைந்துள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படவுள்ளது என்றார்.

பூங்காக்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைந்து பூங்காவை புதுப்பிக்கவேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்ததுடன் பூங்காக்களுக்கு விடிவு வருமா என எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: ரோஜா பூங்காவில் கவாத்து பணி தொடங்கியது !

Intro:05_02_2020

பூண்டில் உள்ள பூங்காக்கள் எப்போதுதான் சீரமைக்கப்படும் பொதுமக்கள் கொந்தளிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் அமைக்கப்பட்ட அனைத்து பூங்காக்களும் முறையான பராமரிப்பின்றி காய்ந்து கிடைப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


Body:05_02_2020

பூண்டில் உள்ள பூங்காக்கள் எப்போதுதான் சீரமைக்கப்படும் பொதுமக்கள் கொந்தளிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் அமைக்கப்பட்ட அனைத்து பூங்காக்களும் முறையான பராமரிப்பின்றி காய்ந்து கிடைப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த பூண்டி நீர்த்தேக்கத்தின் 3231 மில்லியன் கன அடி வரை நீர் சேமிக்கப்பட்டு இங்கிருந்து செம்பரம்பாக்கம் செங்குன்றம் சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் வெளியேற்றப்பட்டு அங்கிருந்து சென்னை குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கண்கவர் பூங்காக்கள் சிறுவர் விளையாட்டு திடல்கள் அமரும் இருக்கைகள் கண்கவரும் அழகிய சிலைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் அமைந்திருந்தது. மேலும் இங்கு உள்ள பிரம்மாண்டமான 16 மதகுகளும் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது விடுமுறை நாட்களான சனி ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் பண்டிகை காலங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குடும்பத்துடன் உணவு சமைத்து உண்டு மாலை வரை தங்கிவிட்டு செல்வது வழக்கம்.

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது பூண்டி நீர்த்தேக்கம் சிதிலமடைந்து வருகிறது சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது அதுமட்டுமில்லாமல் பூங்காக்களுக்கு உள்ளே அமரக்கூடிய இருக்கைகளில் சமூக விரோதிகள் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு அந்த இடத்தை இன்னும் கேவலமாக மாற்றிவிட்டன இதனால் பூண்டிக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் முகம் சுளித்துக் கொண்டு அந்த இடத்தை தாண்டி செல்கின்றன.

இதுகுறித்து பூண்டி ஏரியை பராமரித்து வரும் பொதுப்பணித் துறை அதிகாரியிடம் கேட்டபோது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இப்போது இந்த பணி நிறைவடைந்த பின்னர் ஏற்கனவே சிதிலம் அடைந்துள்ள பூங்காக்கள் மீண்டும் புதிதாக உருவாக்கப்படும் என்றன.

.ஏழைகளின் சுற்றுலா தலமான பூண்டி நீர்த்தேக்கம் விரைவாக சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி சுற்றுலா பயணி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.