ETV Bharat / state

30,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

author img

By

Published : Feb 25, 2020, 10:12 AM IST

திருவள்ளூர்: பட்டாபிராமில் கட்டப்படவிருக்கும் டைட்டில் பார்க் பயன்பாட்டுக்கு வந்தால் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

-k-pandiyarajan
-k-pandiyarajan

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 100 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாபிராம் அருகில் டைட்டில் பார்க் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அப்பணிகளில் முடிவடைந்து டைட்டில் பார்க் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருநின்றவூரில் பேருந்து நிலைய திறப்பு விழா

முன்னாள் முதலலைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலிருக்கும்போது ஆண்டிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டுக்கு 15 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதில் முதலமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ளார். பத்து மாதங்களில் பணி முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும்" என்றார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அரசியல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அமைச்சர் பாண்டியராஜன் பேரவையைத் தவறாக வழிநடத்துகிறார்' - திமுக குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.