படகு இல்லாத மீனவர்களுக்கு கிசான் அட்டை - எல். முருகன் தகவல்

author img

By

Published : Sep 18, 2021, 7:50 PM IST

எல். முருகன் பேட்டி

படகு இல்லாத மீனவர்களுக்கு கிசான் அட்டையை ஒன்றிய அரசு வழங்க உள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு மீன்வள இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசுகையில், "பழவேற்காடு முகத்துவாரத்தை நிலைப்படுத்தும் பணிக்கு 26.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும்.

எல். முருகன் பேட்டி

சென்னை காசிமேடு உள்பட நாடு முழுவதும் 5 துறைமுகங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் புதிய 6 துறைமுக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பழவேற்காடு துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்.

கடற்பாசி வளர்ப்பு வருமானம், வேலைவாய்ப்பு தரும் தொழிலாக உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்புக்கு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு உள்ளது. படகு இல்லாத அனைத்து மீனவர்களுக்கும் கிசான் அட்டை வழங்கப்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: காந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை - சுதந்திரப் போரின் மகத்தான வரலாற்று பக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.