ETV Bharat / state

ஜெயிலர் படத்தின் கதை நன்றாக இல்லை என்றால் படம் ஓடாது - ஆந்திர அமைச்சர் ரோஜா

author img

By

Published : Aug 10, 2023, 11:24 AM IST

Etv Bharat
Etv Bharat

ஆந்திர அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் படம் ஓடும் கதை நன்றாக இல்லை என்றால் படம் ப்ளாப் ஆகிவிடும் என்று தெரிவித்தார்

ஆந்திர அமைச்சர் ரோஜா

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததால் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் சக்தி பிறந்தது போல் உள்ளது என ஆந்திரா அமைச்சர் ரோஜா தெரிவித்தார். திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த கோயிலில் ஆடி கிருத்திகை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரபல நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது அண்ணன் குடும்பத்துடன் ஆடி கிருத்திகை நிகழ்ச்சிக்கு காவடி எடுத்து வந்து மலைக்கோவிலில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் நடிகை ரோஜாவிற்கு மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆந்திர அமைச்சர் ரோஜா, “திருத்தணி முருகப் பெருமானை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் தைரியம் கிடைக்கிறது, ஒரு சக்தி கிடைக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு நான் வேண்டிக் கொண்டேன். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் காவடி எடுத்து வந்து கிருத்திகை நாளில் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றேன்.

முக்கியமாக நான் முதலியார் சமூகத்தைச் சார்ந்த மருமகளாக உள்ளேன். முதலியார் சமூகத்தில் முருகப் பெருமான் தான் குலதெய்வம். இதனால் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட முருகப் பெருமானின் வேல், எப்போதும் என் ஹேண்ட் பேக்கில் வைத்திருப்பேன். இதே போல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வருகிறேன்.

திருச்செந்தூர் கோயிலுக்கும் சென்று உள்ளேன், இதே போல் பழனி முருகன் கோயிலுக்கும் செல்ல வேண்டும். வெகு நாட்களாக செல்ல முடியவில்லை, அந்த கோவிலுக்கும் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். திருத்தணி முருகன் கோயிலுக்கு எப்போதும் நான் தொடர்ந்து வருவேன், எல்லோருக்கும் முருகப் பெருமான் அருள் கிடைக்க நான் வேண்டிக் கொள்கிறேன் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.

தொடர்ந்து ஜெயிலர் படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரோஜா, படம் என்பது கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் படம் நன்றாக ஓடும். கதை திரைக்கதை நன்றாக இல்லை என்றால் படம் பிளாப் ஆகிவிடும்” என்று தெரிவித்தார் இதனை தொடர்ந்து கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயிலில் களைகட்டிய ஆடிக் கிருத்திகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.