ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரியில் 2000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

author img

By

Published : Nov 11, 2021, 11:50 AM IST

2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருவள்ளூர்: கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. மூன்று நாள்களுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், அடுத்தபடியாக 1000 கனஅடி நீரும் பின்னர் 2000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மழை சற்று குறைந்த நிலையிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாகும். கடந்த 2015ஆம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போல் இந்த முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் சீராக திறந்து விடப்படுகிறது.

இதையும் படிங்க: EXCLUISVE: கைவினைக் கலைஞர்களை கவுரவ ஆசிரியர்களாக்க வேண்டும் - பத்மஸ்ரீ முனுசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.