ETV Bharat / state

8-வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் பலி; கொலையா? விபத்தா? என போலீஸ் விசாரணை!

author img

By

Published : Apr 12, 2023, 1:44 PM IST

மத்திய அரசு அதிகாரிகள் குடியிருப்பு 3-வது விரிவாக்க கட்டுமான பணியின் போது இரவு நேரத்தில் தங்கி வேலை பார்த்த 15 வயது சிறுவன் 8-ஆவது மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

avadi
மாடியிலிருந்து விழுந்ததில் சிறுவன் பலி

ஆவடியில் 8-வது மாடியிலிருந்து விழுந்ததில் சிறுவன் பலி

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் சுமார் 1000-ரத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசின் கேந்திரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வட மாநில கட்டுமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி 3-வது விரிவாக்கக் கட்டுமான பணிகள் இரவும், பகலுமாக நடந்து வருகிறது.

அதில் 800 குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தில் கட்டிட வேலையில் பணிபுரியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரபியூல் ஹக்கீ (15), இச்சிறுவன் கடந்த 15 நாட்களுக்கு முன் புதியதாக வேலைக்குச் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அணியாமல் கட்டிட வேலை செய்யும் போது, திடீரென 8-வது தளத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிறுவன் உடல் சிதறி பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும் கட்டிட மேற்பார்வையாளர் அளித்த தகவலின் பெயரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காத ஒப்பந்தக்காரர் மீது குற்றப் பிரிவு 304a என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவ நிகழும் போது அந்த இடத்தில் பணியிலிருந்த கட்டட பொறுப்பு மேற்பார்வையாளர்கள் ரூபேல் உசேன் (25), மணிகண்டன் (29), ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 50% மேல் மத்திய அரசு பாதுகாப்பு துறை நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. அதில் வடமாநில கட்டிட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இரவு, பகலாக வேலை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக வயது வரம்பு இல்லாமல் கட்டிட பணிகளில் வட மாநில கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தியதும் நடத்த இறப்பு மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வரும் கட்டிட சூப்பர்வைசர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயிரிழந்த வட மாநில கட்டிட தொழிலாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது, கொலையா!... விபத்தா! என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில் முறைக்கேடு: நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.