ETV Bharat / state

தொடர் கனமழை: பூண்டி ஏரியிலிருந்து 3,000 கனஅடி நீர் திறப்பு!

author img

By

Published : Jan 6, 2021, 10:36 PM IST

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (ஜன. 06) 3,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை:  பூண்டி ஏரியிலிருந்து  3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
தொடர் கனமழை: பூண்டி ஏரியிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கனமழை காரணமாக விநாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 3125 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதி 400 கனஅடியிலிருந்து 3000 கனஅடியாக நீர் திறப்பை பொதுப்பணித் துறையினர் அதிகரித்துள்ளனர்.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 360 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 9 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வீணாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

தொடர் கனமழை: பூண்டி ஏரியிலிருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!

உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஓரம் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக வறண்டதால் சென்னை மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : 'தமிழர்களின் தியாகத்தால் உருவான என்எல்சியில் மண்ணின் மைந்தர்களைப் பணி நியமனம் செய்க!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.