ETV Bharat / state

10 வயது பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை...

author img

By

Published : Jun 30, 2022, 11:21 AM IST

10 வயது பள்ளி மாணவன்  யோகாவில் உலக சாதனை
10 வயது பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பள்ளி மாணவன், ஒரு நிமிடத்தில், 32 முறை பாத குண்டலாசனம் செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

திருவள்ளூர்: மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை சேர்ந்த நாகராஜ், நவநீதம் தம்பதியர் மகன் ரா.நா.ரவிகிருஷ்ணா(10)அங்குள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகா பயின்று வருகிறார்.

இவர், இரு கால்களுக்கு இடையே உடலை முன் நோக்கி வளைத்து, பின்புறமாக தலையை மேல் நோக்கி பார்க்கும், பாத குண்டலாசனம் என்னும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 32 முறை செய்து உலக சாதனை படைத்தார்.

10 வயது பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை

இவரது சாதனை, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’ "அசிஸ்ட் உலக சாதனை", "இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்", ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.

சாதனை படைத்த மாணவன் ரவிகிருஷ்ணா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமீர் கான் - ராம்சரண் சந்திப்பு..! இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.