ETV Bharat / state

இளைஞர் கொலை வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை!

author img

By

Published : Nov 1, 2019, 11:41 AM IST

thirunelveli court

திருநெல்வேலி: வள்ளியூரில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து நெல்லை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து நெல்லை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து ஏழு பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் பகவதி (27). சமையல் பணி செய்துவரும் இவர், வள்ளியூரில் தனது தாய், சகோதரியுடன் வசித்துவந்தார். இந்நிலையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி சாப்பிடுவதற்காக வள்ளியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைக்கு வந்துள்ளார்.

ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை

அப்போது அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களான முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், ஐயப்பன், சுரேஷ், கணேசன், சிவா, சுல்தான் உள்ளிட்ட ஏழு பேர் பகவதியை ஆம்னி வேனில் கடத்திச் சென்று ரயில் நிலையம் அருகே தன்பால் உறவுக்கு வற்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பகவதியை அடித்துக் கொலை செய்துவிட்டனர்.

இது குறித்து வள்ளியூர் காவல் துறையினர் ஏழு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் குற்றவாளிகள் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து ஏழு பேரையும் காவல் துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Intro:நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து நெல்லை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்துள்ளார். இதனை அடுத்து 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . Body:நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து நெல்லை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்துள்ளார். இதனை அடுத்து 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .
         
நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் பகவதி 27 வயதாகும் இவர் வள்ளியூரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் சமையல் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23-04-2008-ம் ஆண்டு வீட்டில் உள்ள தாய் மற்றும் சகோதரிக்கு இரவு உணவு வாங்குவதற்காக வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைக்கு வந்துள்ளார் . அப்போது அங்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, முத்துக்கிருஷ்ணன் , ஐயப்பன் , சுரேஷ் , கணேசன் , சிவா மற்றும் சுல்தான் ஆகிய 7 பேர் பகவதியை ஆசை வார்த்தை கூறி அழைத்து ஒரு ஒம்னி வேனில் கடத்தி சென்று ரெயில் நிலையம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. உடன்படாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பகவதியை அடித்து கொலை செய்துவிட்டனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும் , தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார் . இதனையடுத்து 7 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.