ETV Bharat / state

கெடுபிடிகளுக்கு நடுவே விஜயுடன் போட்டோ எடுத்த ரசிகர்கள்.. நெல்லையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 5:38 PM IST

Etv Bharat
Etv Bharat

Leo Movie: விஜயின் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதனை வரவேற்கும் விதமாக நெல்லையில் முதன்முறையாக ஏ.ஆர்.தொழில்நுட்பத்தில் நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுக்க செய்திருந்த ஏற்பாடு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'லியோ' படம் பார்க்க வந்த ரசிகர்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லியோ' (Leo Movie) திரைப்படம் இன்று (அக்.19) உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நெல்லை சந்திப்பு அருகே ராம் சினிமாஸ் திரையரங்கில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறையின் கெடுபிடி காரணமாக அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், லியோ திரைப்படத்தை வரவேற்கும் விதமாகவும் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் சார்பில் அதிநவீன தொழில் நுட்பமான ஆக்மென்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை (Augmented Reality Technology) பயன்படுத்தி நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் தங்களது மொபைல்களில் விஜயுடன் இருப்பது போல, புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

பல்வேறு வகைகளில் விஜயின் புகைப்படங்கள் ஏ.ஆர்.தொழில்நுட்பத்தில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு தேவையானப் புகைப்படத்தைத் தேர்வு செய்து தங்களது மொபைல் போனில் இருக்கும் கியூஆர் ஸ்கேனர் (QR Scaner) மூலம் ஸ்கேன் செய்தால், அதில் தோன்றும் விஜயின் புகைப்படத்தின் அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வமுடன் இதனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏ.ஆர். தொழில்நுட்பம் இதுவரை வேறு எங்கும் திரைப்படங்கள் வெளியிட்டின் போது பயன்படுத்தாத நிலையில் தமிழகத்தின் முதன்முறையாக நெல்லை சந்திப்பு அருகே உள்ள ராம் சினிமா திரையரங்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ஏ.ஆர்.தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: லியோ ரிலீஸின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள்.. திருமணம் முதல் அபராதம் வரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.