ETV Bharat / state

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் திறப்பு

author img

By

Published : Jul 20, 2021, 9:19 PM IST

ஆக்ஸிஜன் உற்பத்திக்கூடம் திறப்பு
ஆக்ஸிஜன் உற்பத்திக்கூடம் திறப்பு

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் மருத்துவ திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்திக்கூடத்தை, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலி: தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் மருத்துவ திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய, உற்பத்திக் கூடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (ஜூலை 20) தொடங்கிவைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், கூடங்குளம் அணுமின் நிலையம், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 120 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

தயார் நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்கள்

கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் இரண்டு இடங்களிலும், அரசு சார்பில் கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திறந்து வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் கூடத்தை பார்வையிடும் அலுவலர்கள்
திறந்துவைக்கப்பட்ட ஆக்சிஜன் கூடத்தைப் பார்வையிடும் அலுவலர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகர் கோட்பாலே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஜெ., பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது - பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.