ETV Bharat / state

பி.எச். பாண்டியன் மீது புகாரளித்த சகோதரர்

author img

By

Published : Apr 2, 2019, 12:07 AM IST

பி. சாலமோன் பாண்டியன்.

திருநெல்வேலி: நெல்லை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக நெல்லை அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனின் தந்தை பி.எச். பாண்டியன் மீது அவரது சகோதரர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பி. சாலமோன் பாண்டியன். இவர் இந்திய காப்பீட்டுக் கழகத்தின் வியாபாரம் முன்னேற்ற மேலாளராக பணிபுரிந்தார்.பி.எச். பாண்டியனின் சகோதரரான இவருக்குபூர்வீக சொத்தாகசேரன்மகாதேவிஅருகேவுள்ள கோவிந்தப்பேரியில் 5 ஏக்கர் நிலம்உள்ளது. இந்த இடத்தை நெல்லை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தந்தை பி.எச்.பாண்டியன் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

பி எச். பாண்டியன் ஐந்து பேருடன் பிறந்துள்ளார். ஆனால் அந்த ஐந்து பேர் சொத்தையும் பி.எச். பாண்டியன் ஒருவரேஅபகரித்து விட்டதாகவும் அந்த சொத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்தி குமாரிடம் பாதிக்கப்பட்ட சாலமோன் பாண்டியன் இன்று புகார் மனு கொடுத்துள்ளார்.

பி. சாலமோன் பாண்டியன்.

இந்த சொத்து மதிப்பு தற்போது 25 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் இதுகுறித்து பேசிய மனுதாரர் பி.எஸ். பாண்டியன் கூறிவதாவது, "சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரிதான் எங்களது சொந்த ஊர். எனது தாயார் பெயரில் உள்ள சொத்துக்களை அவரது காலத்துக்குப்பின், பி எச். பாண்டியன் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து நிலத்தை அபகரித்து விட்டார். இந்த நிலத்தின் மதிப்பு தற்போது 25 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. ஆகவே இந்த நிலத்தை அபகரித்த பி.எச். பாண்டியன் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.அந்த சொத்தை மீட்டு தரவேண்டும் " என்று எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நெல்லை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்தாக நெல்லை அதிமுக வேட்பாளர் தந்தை மீது அவரது அண்ணன் எஸ்பியிடம் புகார்.

கோயமுத்தூர் மாவட்டம் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் பி. சாலமோன் பாண்டியன் இவர் இந்திய காப்பீட்டுக் கழகத்தின் வியாபாரம் முன்னேற்ற மேலாக பணிபுரிந்தார் இவர் பிஎச். பாண்டியனின் சகோதரர் அவர்களின் பூர்வீக சொத்தான சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்த பேரில் 5 ஏக்கர் 13 .76 சென்ட் உள்ளது. இந்த இடத்தை நெல்லை அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தந்தை பி.எச்.பாண்டியன் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது பி எஸ் பாண்டியன் ஐந்து பேருடன் பிறந்துள்ளார்கள் ஆனால் அந்த ஐந்து பேர் உள்ள சொத்தையும் பிஎச். பாண்டியன்  அபகரித்து விட்டதாகவும் அந்த சொத்தை மீட்டுத் தர வலியுறுத்தி நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்தி குமாரிடம் பாதிக்கப்பட்ட சாலமோன் பாண்டியன் இன்று புகார் மனு கொடுத்துள்ளார். இந்த சொத்து மதிப்பு தற்போது ரூ 25 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மனுதாரர் பி. எஸ். பாண்டியன் கூறும்போது சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி தான் எங்களது சொந்த ஊர் எனது தாயார் பெயரில் உள்ள சொத்துக்களை எனது தாயார் காலத்துக்குப்பின் பி எச். பாண்டியன் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்து நிலத்தை அபகரித்து விட்டார் இந்த நிலத்தின் மதிப்பு தற்போது 25 கோடி ரூபாய்க்கு மேலே உள்ளது ஆகவே இந்த நிலத்தை அபகரித்த பிஎச். பாண்டியன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்  மேலும் அந்த சொத்தை மீட்டு தரவேண்டும் என்றும் நான் எஸ்பியிடம் புகார் தெரிவித்து உள்ளேன் என தெரிவித்தார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.