ETV Bharat / state

திருமங்கலத்தை விட 20 மடங்கு கூடுதல் பணம் ஈரோட்டில் விளையாடியுள்ளது - நயினார் நாகேந்திரன்

author img

By

Published : Feb 27, 2023, 7:41 PM IST

Nainar Nagendran said 20 times more money was played in Erode than Thirumangalam
திருமங்கலத்தை விட 20 மடங்கு கூடுதல் பணம் ஈரோட்டில் விளையாடியுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

'திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. அதிகமான பணப்புழக்கம் இருந்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது' என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருமங்கலத்தை விட 20 மடங்கு கூடுதல் பணம் ஈரோட்டில் விளையாடியுள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி: திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி, கழிவு நீர் ஓடை பராமரிப்புப் பணி உள்ளிட்டவைகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு சட்டமன்றக் குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.62 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பாதாள சாக்கடை பராமரிப்புப் பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்புப் பணி உள்ளிட்டவைகள் நடந்து வருகிறது. நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டத்திற்கு முன்பாக சாலைகள் பராமரிக்கப்பட்டு தேர் எந்தவித பிரச்னையும் இன்றி போவதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

'20 நாட்களுக்குள் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன். திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்துள்ள காரணத்தால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானூர் உள்ளிட்டப் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்து விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து இருக்கிறேன். நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைக்க இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

மேலும், 'திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணம், ஈரோடு கிழக்கு தொகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தை போட்டு காட்டி பணம் கொடுத்துள்ளனர். நாகாலாந்து, மேகாலயா தேர்தல் மட்டுமல்ல; வரும் அனைத்து தேர்தலும் பாஜகவிற்கு தான் ஆதரவாக அமையும்.

இதுவரை பாஜக எந்த எம்எல்ஏ-க்களையும் விலைக்கு வாங்கியதில்லை. கட்சிகளில் இருக்கும் குரூப் பாலிடிக்ஸ் காரணமாக அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு வெளியே வருவதால், சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் குரூப் பாலிடிக்ஸ் இல்லை; இனி நடக்கலாம்’ எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மதுரை கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது; ஆனால் அதிகமான பணபுழக்கம் இருந்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸூக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.