ETV Bharat / state

விபத்து நேரிட்ட கல்குவாரியில் ஆய்வு பணிகள் விரைவில் முடிக்கப்படும்: நெல்லை மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : May 29, 2022, 6:29 AM IST

விபத்து நேரிட்ட கல்குவாரியில் ஆய்வு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை கல்குவாரி ஆய்வு பணிகள் எப்போது முடிக்கபடும்? மாவட்ட ஆட்சியர் பேட்டி
நெல்லை கல்குவாரி ஆய்வு பணிகள் எப்போது முடிக்கபடும்? மாவட்ட ஆட்சியர் பேட்டி

நெல்லை: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக டவுன் குன்னத்தூர் சாலையில் அமைந்துள்ளது திருநெல்வேலி கால்வாயை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கால்வாய் திருநெல்வேலி கால்வாய் கோடகன் கால்வாய் ஆகிய பிரதான கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.

பாளையங்கோட்டை கால்வாயில் 9,500 ஏக்கர், கோடகன் கால்வாயில் 6,000 ஏக்கர், திருநெல்வேலி கால்வாயில் 6,410 ஏக்கர் என மொத்தம் சுமார் 21,910 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பருவமழையில் பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது முன்னதாகவே தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டு ஏற்படும் வடகிழக்கு பருவமழைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிகள் மூலம் நெல்லை மாநகராட்சி பகுதியில் இந்தாண்டு வெள்ளப் பாதிப்பு ஏற்படாது. இந்த தூர்வாரும் பணிகளின்போது ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். முதல்முறையாக மூன்று கால்வாய்க்குட்பட்ட அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படுகிறது.

பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் தூர்வாரும் பணியில் சவாலாக உள்ளது. எனவே அதுகுறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை ஒரு சில ஆக்கிரமிப்புகளை கண்டறியப்பட்டாலும் அவர்கள் அதிக வருடங்களாக வசிப்பதால் அவற்றை அகற்றுவது ஆராய்ந்து வருகிறோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி அணைகளில் தண்ணீர் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்" என்றார்.

தொடர்ந்து நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலியாக மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரியில் நடைபெற்று வரும் ஆய்வு குறித்து கேட்டபோது, கல்குவாரிகளில் 18 பேர் அடங்கிய ஆறு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அந்த பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து எதிரொலி - 55 குவாரிகளை ஆய்வு செய்ய ஆறு சிறப்புக் குழுக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.