திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் இழுத்தடிப்பு... மக்கள் கடும் அவதி...

author img

By

Published : Sep 19, 2022, 1:50 PM IST

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவு வழங்குவதில் தாமதம்...ஊழியர்கள் அலட்சியம்
அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவு வழங்குவதில் தாமதம்...ஊழியர்கள் அலட்சியம் ()

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல மணி நேரமாக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. அலுவலர்களின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பக்கத்து மாவட்ட நோயாளிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமார் 1,000 படுக்கை வசதி கொண்ட பெரிய மருத்துவமனையாகும். ஆனால் சமீபகாலமாக இங்கு பொதுமக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் மிக தாமதம் ஏற்படுவதால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பசி பட்டினியோடு கால்கடுக்க காத்து கிடக்கும் அவலம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழைய கட்டடம், புது கட்டடம் என இரு பிரிவுகளாக மருத்துவமனை இயங்கி வரும் நிலையில் பழைய கட்டடத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் தான் பெரும்பாலான ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவு வழங்குவதில் தாமதம்...ஊழியர்கள் அலட்சியம்

இதற்காக மூன்று கவுன்டர்கள் இருந்தாலும் கூட பெரும்பாலும் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 1,000 நோயாளிகளின் ரத்த மாதிரிகள் வாங்கப்படுகிறது. தற்போது நவீன தொழில்நுட்பம் காரணமாக அதிகபட்சம் மூன்று மணி நேரத்துக்குள் அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளையும் வழங்க முடியும்.

ஆனால் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு நாள் கணக்கில் பொதுமக்கள் காத்து கிடக்க நேரிடுகிறது. கேட்கும் போதெல்லாம் பிறகு வாருங்கள் பிறகு வாருங்கள் என ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரவு பகல் பாராமல் கவுன்டர் முன்பு பொதுமக்கள் பசி பட்டினியுடன் காத்து கிடக்கின்றனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகளும் மணிக் கணக்கில் காத்து கிடக்கும் அவலம் உள்ளது. ஊழியர்களிடம் கேட்டால் மிகவும் தரக்குறைவாக பதில் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உள்ளே ஊழியர்கள் செல்போனில் கேம் விளையாடி கொண்டு அலட்சியத்துடன் பதில் கூறுவதாகவும் குமுறுகின்றனர்.

எனவே கூடுதல் கவுன்டர் ஏற்படுத்தி தாமதமில்லாமல் ரத்த பரிசோதனை முடிவு வழங்க வேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நேரில் அலையாமல் சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களின் செல்போனுக்கே நேரடியாக முடிவுகள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 2 நோயாளிகளுக்கு நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தி சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.