ETV Bharat / state

விவசாயத்துக்கு நீர் இல்லை.. நெல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சபாநாயகரின் பதில் என்ன?

author img

By

Published : Aug 7, 2023, 7:11 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு

செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு

திருநெல்வேலி: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவகம் போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நினைவகத்தில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உலகம் இருக்கும் வரையில் தமிழ்நாடு மக்களுக்காக கலைஞர் செய்த பணி இருக்கும். நெல்லை மத்திய மாவட்டத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்குத் தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், திமுக மூத்த நிர்வாகி சுப.சீத்தாராமன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலாசத்தியானந்த், மேயர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கோவையில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் சுமார் 6 அடி கலைஞர் சிலை, மற்றும் கலைஞரின் பதாகைகள் ஏந்தியபடி அமைதிப் பேரணி நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக தொடங்கிய பேரணி நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் அண்ணா சிலையை வந்தடைந்தது.

தொடர்ந்து அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, ''அனைத்து கட்சியினரும் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுடைய மனதிலும் கலைஞர் இடம் பெற்றுள்ளார். பல்வேறு திட்டங்கள் நிறைவேறுவதற்கு கலைஞர் காரணமாக இருந்து உள்ளார்.

கலைஞருடைய பெருமையை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்ப்பது எங்களது எண்ணம் இல்லை, கட்சி சார்பில் செய்யக்கூடியவையாக இருந்தாலும், அரசு சார்பாக இதை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல திட்டங்கள், நலத்திட்டங்கள் போய் சேர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். திமுகவினர் மனதில் உள்ள வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பேரணி நடைபெற்றுள்ளதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் 6 அடி சிலையுடன் அமைதிப் பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.