ETV Bharat / state

100 நாள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நட உத்தரவிடக் கோரிக்கை

author img

By

Published : May 5, 2022, 7:35 PM IST

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் பனை,முருங்கை மரங்களை நட உத்தரவிடக் கோரிக்கை

நெல்லை: ஒன்றிய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பனைமரங்களையும், முருங்கை மரங்களையும் நடுவதையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்துக்காக, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு மத்திய அரசு, ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் தமிழ்நாட்டில் நட உத்தரவிட வேண்டும்.

பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருள்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக் கோரி 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி மத்திய - மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.