ETV Bharat / state

தைப்பூசம்: சண்முகநாதர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் தரிசனம்

author img

By

Published : Feb 8, 2020, 10:25 PM IST

theni
theni

தேனி: தைப்பூசத்தை முன்னிட்டு பசுமலைச்சாரல் சண்முகநாதர் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள பசுமலைச்சாரலில் அமைந்துள்ளது ஸ்ரீசண்முகநாதன் பால தண்டாயுதபாணி கோயில். இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும். அதன்படி இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல் உற்சவர் ஸ்ரீசண்முகநாதன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் பவனி வந்தார். அதைத்தொடர்ந்து மாலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், இக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, கோயில் புனரமைப்பு, குடமுழக்கு செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சண்முகநாதர் கோயிலில் துணை முதலமைச்சர்

இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முன்னாள் நீதி அரசர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சாமி தரிசனம் செய்ய காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதையும் படிங்க: தைப்பூசம் : சுவாமிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

Intro: தைப்பூசத்தை முன்னிட்டு கம்பம் அருகே உள்ள சண்முகநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கோவில் புணரமைப்பு மற்றும் குடமுழுக்கு செய்வதற்காக அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம.;
Body: தேனி மாவட்டம் கம்பம் அருகே பசுமலைச் சாரலில் அமைந்துள்ளது ஸ்ரீசண்முகநாதன் பால தண்டாயுதபாணி கோவில். சண்முகநாதன் அணை அருகே பசுமை மலைச்சாரலில் பழமை வாய்ந்த இக்கோவிலில் முருகனுக்கு உகந்த நாட்களான தைபூசம், பங்குனி உத்திரம் போன்ற விஷேச நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இன்று தை பூசத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கி, 9 மணி வரை பால் அபிசேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
         அதே போல் உற்சவர் ஸ்ரீசண்முகநாதன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாக பகுதிகளில் பவனி வந்தார். இதையொட்டி காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
         இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று மாலை அருள்மிகு ஸ்ரீசண்முகநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பரிவட்டம் கட்டி கும்ப மரியாதை செய்யப்பட்டது. சாமி தரிசனத்தை முடித்த பின்னர் அருள்மிகு ஸ்ரீசண்முகநாதர் திருக்கோவிலில் சிறப்புகள் மற்றும் கோவில் வரலாறுகள் பற்றி கேட்டறிந்தார்.

Conclusion: இதன் தொடர்ச்சியாக கோவில் புனரமைப்பு மற்றும் குடமுழக்கு செய்வதற்காக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முன்னாள் நீதி அரசர் ராகுபதி உள்ளட்டேர் கலந்து கொண்டனர்.
         
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.