ETV Bharat / state

'கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் இல்லை' என அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் ஃபைன்!

author img

By

Published : Nov 2, 2022, 8:08 PM IST

Etv Bharat
Etv Bharat

தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் ஆய்வாளருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சிலை மணி என்பவர், கடந்த 27.8.2018அன்று நான்கு சக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் சிவன்ராஜ் என்பவரை, வழிமறித்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி சென்றதாகப் போலியாக வழக்குப்பதிவு செய்து ரூ.2,000 அபராதமாக வசூலித்ததோடு, அதற்கு ரூ.100 மட்டும் அபராதம் என ரசீது, கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அவரை அவதூறாகப்பேசியும் அவருடன் காரில் பயணத்த முகம்மது யாசிர் என்பவரையும் மூர்க்கத்தனமாக தாக்கி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக, வழக்கறிஞர் சிவன்ராஜ் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கினை இன்று (நவ.2) விசாரித்த நீதியரசர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல் ஆய்வாளர் சிலை மணி செய்த மனித உரிமை மீறல் மற்றும் சட்ட விதிமுறை மீறல் உறுதியானதால் உத்தமபாளையம் காவல் ஆய்வாளராக, தற்போது பணிபுரிந்து வரும் சிலை மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

காவல் ஆய்வாளரின் இத்தகைய செயலும், அதற்காக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நேர்மையாக இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல' - டிஜிபி சைலேந்திர பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.