ETV Bharat / state

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது - ஓ. பன்னீர்செல்வம்

author img

By

Published : Aug 5, 2019, 5:17 PM IST

cm panneerselvam

தேனி: சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இன்று தேனியில் இஸ்லாமிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று நிதியுதவி வழங்கினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல நன்மைகளை செய்து வருகிறோம். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நன்றாக படித்து விஞ்ஞானியாக செயல்பட்டதால் தான் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தது. எனவே அனைத்து மாணவர்களும் நன்றாக கல்வி கற்க வேண்டும், அதற்காக தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் மீது வன்கொடுமை நிகழாமல் ஒரு தாய் மக்களாக இருந்து வருகிறோம். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக செயல்படுகிறது என்றார்.

Intro: சிறுபான்மையினர் நலனில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எந்தவொரு வன்கொடுமையும் நிகழாமல் ஒரு தாய் மக்களாக, அமைதிப்பூங்காவாக தமிழகம் செயல்பட்டு வருகிறது, என துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு.


Body: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக இன்று தேனியில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தை சேர்ந்த பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நிதி உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பேசிய அவர்,
இஸ்லாமிய மக்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல நன்மைகளை செய்து வந்துள்ளதாகவும், அதேபோன்று தற்போதுள்ள தமிழக அரசும் இஸ்லாமிய மக்களின் நலன்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நன்றாக படித்து விஞ்ஞானியாக செயல்பட்டதால் தான் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தது.
எனவே அனைத்து மாணவர்களும் நன்றாக கல்வி கற்க வேண்டும், அதற்காக தமிழக அரசு துணை நிற்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினர் நலனில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் மீது வன்கொடுமை நிகழாமல் ஒரு தாய் மக்களாக தமிழகம் அமைதிப்பூங்காவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி மற்றும் கம்பம் ஆகிய 3சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 500 முஸ்லிம் பெண்களுக்கு தலா 6ஆயிரம் வீதம் சிறு தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி மற்றும் வருவாய் துறை சார்பில் 98பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை துணை முதல்வர் ஓ.பி.எஸ் வழங்கினார்.




Conclusion: இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.