ETV Bharat / state

மூணாறில் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்!

author img

By

Published : Mar 11, 2020, 8:22 AM IST

ஊருக்குள் புகம் காட்டுயானைகள்  மூணாறு காட்டுயானை  தேனி மாவட்டச் செய்திகள்  elephant conflict  munnar elephant  munnar elephant attacked house and houses were damaged
காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள்

வனப்பகுதியிலிருந்து வெளியேறி மூணாறு அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் காட்டுயானைகள் பெருமளவில் இருக்கின்றன. இந்தக் காட்டுயானைகள் அவ்வப்போது, குடிநீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் கூட்டம்கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் படையெடுத்துவருகின்றன.

இதனால், சில உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியிருக்கின்றனர். காட்டு யானைகளால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கிப் படையெடுக்கும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் வனத் துறையினர் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானைகள் மூணாறு அருகேயுள்ள அடிமாலி, சின்னக்கானல், பீர்மேடு உள்ளிட்ட கூடங்களில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்திவருகின்றன.

இரவு பகல் பாராமல் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: நகர்ப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.