ETV Bharat / state

4 வழிச்சாலையால் 100 ஏக்கர் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை

author img

By

Published : Jan 11, 2020, 12:16 PM IST

தேனி: நான்கு வழிச்சாலையால் 100 ஏக்கர் செங்கரும்பு சாகுபடி பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நான்கு வழிச்சாலையால் 100ஏக்கர் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு
நான்கு வழிச்சாலையால் 100ஏக்கர் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர், சீலையம்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயிரிடப்பட்ட செங்கரும்பை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இதனை வாங்குவதற்காக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் செங்கரும்பு விற்பனை அப்பகுதியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நான்கு வழிச்சாலையால் 100ஏக்கர் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு

ஆனால், சிறப்பு வாய்ந்த சின்னமனூர் செங்கரும்பு சாகுபடி கடந்தாண்டு 250 ஏக்கர் பயிரிடப்பட்டன. இந்தாண்டு நான்கு வழிச்சாலையால் 100 ஏக்கர் நிலங்களை மாவட்ட நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் இருந்து பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் வெறும் 150ஏக்கர் மட்டுமே செங்கரும்பு பயிரிடப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னமனூர் கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு பயிரிடுவதற்கு 1.5 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் செங்கரும்பு கட்டின் விலை ரூ.200 முதல் 250 வரை தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை போதுமானதாக இல்லை" என்றனர். மேலும், நான்கு வழிச்சாலையால் 100 ஏக்கர் கரும்பு சாகுபடி பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் விளைச்சல் அமோகம்... ஆனால் விலை இல்லையே? வருத்தத்தில் விவசாயிகள்!

Intro: பொங்கல் பண்டிகையில் சுவைக்கப்படும் சிறப்பு வாய்ந்த சின்னமனூர் செங்கரும்பு.!
நான்கு வழிச்சாலைச்சாலைக்காக பாசனநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் குறைந்த அளவில் நடைபெற்ற செங்கரும்பு சாகுபடி.!



Body: தேனி மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இவற்றில் முல்லைப்பெரியாற்று பாசன நிலங்களான சின்னமனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறும் செங்கரும்பு சாகுபடிக்கு இயற்கையாகவே சுவை மிகுந்ததாக இருப்பதால் சற்று கிராக்கி அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், தமிழர் திருநாளாம்! தைத்திருநாள்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு முகாமிட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு விற்பனை இப்பகுதியில் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் சிறப்பு வாய்ந்த சின்னமனூர் செங்கரும்பு சாகுபடி கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவாகவே உள்ளது. திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலைக்காக சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால், செங்கரும்பு சாகுபடி குறையத் தொடங்கியுள்ளது.
சின்னமனூர், பூலாநந்தபுரம், சீலையம்பட்டி, உள்ளிட்ட இடங்களில் சுமார் 250ஏக்கரில் நடைபெற்று வந்த செங்கரும்பு சாகுபடியானது தற்போது சுமார் 150ஏக்கருக்கும் குறைவாகவே நடக்கிறது. இதன் காரணமாக சுவை மிகுந்த சின்னமனூர் செங்கரும்பு வெளி மாவட்ட சந்தைக்கு குறைந்த அளவிலே அனுப்பப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், சாகுபடி குறைந்த இவ்வேளையில், செங்கரும்பிற்கான உரிய கொள்முதல் விலையும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.



Conclusion: இது குறித்து சின்னமனூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், விதைக்கரும்பு, உரமிடுதல், எருவடித்தல், மருந்து அடித்தல், சோகை ஒடித்தல் என ஏக்கருக்கு சுமார் 1.5 லட்சம் வரை செலவாகிறது. நடவு செய்து 10 மாதம் கழித்து அறுவடைக்கு தயாராகும் நீண்ட காலப்பயிராகும் செங்கரும்பு சாகுபடி வருடத்திற்கு ஒருமுறை தான் பலனளிக்கும். ஆனால் 10கரும்புகள் கொண்ட ஒரு கட்டு செங்கரும்பு ரூ.200 முதல் ரூ.250 வரை தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த விலையானது கட்டுபடியாகாத நிலையில் இருக்கிறது.
மேலும் பொங்கல் பரிசு கரும்பிற்கான அரசின் கொள்முதல் விலை ரூ.180 வரை மட்டுமே கிடைப்பதால் அதனோடு ஒப்பிட்டு சில வியாபாரிகள் குறைந்த விலைக்கு பேரம் பேசி கொள்முதல் செய்கின்றனர். இதனால் அனைத்து விவசாயிகளும் பாதிப்படைகின்றனர். எனவே செங்கரும்பிற்கான அரசின் கொள்முதல் விலையை ரூ.300ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

பேட்டி : மூலப்பத்தன் - விவசாயி, சின்னமனூர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.