ETV Bharat / state

அரசு நிலம் தனியாருக்கு பட்டா… தலைமறைவான வட்டாட்சியர் கைது

author img

By

Published : Nov 17, 2022, 6:16 AM IST

தலைமறைவான வட்டாட்சியர் கைது
தலைமறைவான வட்டாட்சியர் கைது

தேனியில் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு பின் கைது செய்தனர்.

தேனி: பெரியகுளம் அடுத்த வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள 182 ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தனியாருக்கு கொடுக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை வட்டாட்சியர்கள் சஞ்சிவ்காந்தி, மோகன்ராம், நில சர்வையர் சக்திவேல், நில சர்வைய உதவியாளர் பிச்சைமணி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தலைமறைவான வட்டாட்சியர் கைது

இந்த நிலையில் சஞ்சிவ்காந்தி, மோகன்ராம், சக்திவேல், பிச்சைமணி ஆகியோர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ரத்னமாலா ஆகியோர் 1 ஆண்டுகளாக தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் இன்று வட்டாட்சியர் கிருஷ்னகுமார் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நேரில் ஆஜாராகினர். அவரை சிபிசிஐடி டிஎஸ்பி சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து, நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: தேனியில் 18ஆம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளில் நீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.