போலி பத்திரம் தயாரித்து விவசாய நிலம் அபகரிப்பு? நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

author img

By

Published : Jun 3, 2023, 10:53 PM IST

போலி பத்திரங்கள் மூலம் விவசாயிகளை வெளியேற்றும் தனியார் கல்குவாரி நிறுவனம்
போலி பத்திரங்கள் மூலம் விவசாயிகளை வெளியேற்றும் தனியார் கல்குவாரி நிறுவனம் ()

விவசாய நிலங்களை முறைகேடுகளாக பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்ததாக தனியார் கல்குவாரி நிறுவனம் மீது விவசாயிகள் கண்ணிர் மல்க குற்றச்சாட்டியுள்ளனர்.

தேனி: விவசாய நிலங்களை முறைகேடுகளாக பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்ததாக தனியார் கல்குவாரி நிறுவனம் மீது விவசாயிகள் கண்ணிர் மல்க குற்றச்சாட்டி உள்ளனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

போலி பத்திரங்கள் மூலம் விவசாயிகளை வெளியேற்றும் தனியார் கல்குவாரி நிறுவனம்

வலையபட்டி கிராமத்தினர் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமுறை தலைமுறையாக மானாவரி விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் நிலத்தை ஒட்டி உள்ள பிரபல தனியார் கல்குவாரி நிறுவனம், அந்த நிலத்தை வாங்கி விட்டதாக கூறியும் அதில் யாரும் விவசாயம் செய்ய கூடாது என்றும் விவசாயிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Erode: மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு: விலை உயர்வால் பொதுமக்கள் அவதி!

மேலும் அந்த தனியார் கல்குவாரி நிறுவனம் நிலங்களை சொந்தம் கொண்டாடுவதுடன் விவசாயிகளை மிரட்டி வெளியேற சொல்வதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தும் இதுவரை எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் விவசாயம் செய்வதற்கான பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளும் போது கல்குவாரி நிறுவன உரிமையாளர்கள் அவர்களை மிரட்டி வெளியே செல்லும் படி கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது விவசாய நிலம் அருகே அப்பகுதி விவசாயிகள் அமைத்த கூரைகளை இரவோடு இரவாக தீ வைத்து எரிக்கப்பட்டதாக கண்ணீர் மல்க விவசாயிகள் கூறுகின்றனர்.

இது மட்டுமின்றி முன்னதாக இந்த நிலங்கள் மீது போலி பத்திரங்களை பதிந்து கல்குவாரி உரிமையாளர்கள் அப்பகுதி விவசாயிகளை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தனியார் கல்குவாரி நிறுவனத்திடம் இருந்து நிலத்தை மீட்டு தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோடு மாட்டு சந்தையில் நடந்த நூதன மோசடி.. கர்நாடக ஆசாமியை முற்றுகையிட்ட வியாபாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.