ETV Bharat / state

chocolate day: நீலகிரி ஹோம் மேட் சாக்லேட்டுகள்: சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு!

author img

By

Published : Jul 7, 2023, 10:46 PM IST

Updated : Jul 8, 2023, 2:55 PM IST

Etv Bharat
Etv Bharat

உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் சாக்லெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறப்பு வாய்ந்த பாகுதியாக உள்ள நீலகிரி மாவட்ட ஹோம் மேட் சாக்லேட்டுகள் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

நீலகிரி சாக்லேட்டுக்கு சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பு

நீலகிரி: குன்னூர் மலைப்பகுதி சுற்றுலாவுக்கு மட்டும் அல்ல சாக்லேட்டுகளும் பிரபலமானது. இங்குள்ள மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் அதிக அளவு கொக்கோ செடிகளைப் பயிரிட்டு அதன் மூலம் நல்ல லாபம் பெருக்கின்றனர். இந்த கொக்கோ செடிகள் குளிர்ச்சியான காலநிலையில் உள்ள நிலப்பகுதிகளில்தான் அதிகம் விளைச்சல் தரும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த கொக்கோ செடிகளைப் பயிரிடமுடியும். அது மட்டுமின்றி இந்த கொக்கோ செடிகள் ஊடு பயிராகவும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

இப்படி அங்கு விளையும் கொக்கோ விதைகள் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றது. அதேபோல் இந்த கொக்கோ விதைகளைக் கொண்டு அங்குள்ள பல விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சொந்தமாக ஹோம் மேட் ஜாக்லேட்டுகளை தயாரிக்கின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக சிம்ஸ் பார்க், லேம்ஸ்ராக், சால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் ஏராளமான ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் இந்த சாக்லேட்டுகளை வாங்கி செல்கின்றனர். அது மட்டுமின்றி சாக்லேட்டுகளுக்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கென சிறப்பான முறையில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து ஈடிவி பாரத் தமிழுக்குப் பேட்டியளித்த நீலகிரி மாவட்ட சாக்லேட் உற்பத்தியாளர் புண்ணிய செல்வி, நீலகிரியில் தயாரிக்கப்படும் சாக்லேட்டில் 40 சதவீதம், 60 சதவீதம், 90 சதவீத என கொக்கோவின் அளவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு -ஃபிளேவர்களில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அந்த சாக்லேட்டுகளில் பாதாம் மற்றும் பாதாம் பால் உள்ளிட்ட பல்வேறு நட்ஸ் வகைகள் சுவைக்காகச் சேர்க்கப்படுவதாகவும் அவர் அப்போது கூறினார். அது மட்டுமின்றி கிவி, மாம்பழம், பைனாப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் அதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சாக்லேட் கொரியர் செய்யப்பட்டு வரும் நிலையில் நீலகிரி சாக்லேட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது எனவும் தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய சாக்லேட் கடை விற்பனையாளர் சரண்யா, நீலகிரி மாவட்டம் சாக்லேட்டிற்கு ஃபேமஸ் எனவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாக்லேட் வாங்கமால் செல்வது இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் குழந்தைகளைக் கவரும் வகையில் ஜெல்லி உள்ளிட்ட பல்வேறு சாக்லேட் வகைகள் தயாரிக்கப்படுவதாகவும், டார்க் சாக்லேட், வைட் சாக்லேட்க்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படும் நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா என உலக நாடுகளிலிருந்த சாக்லேட் கலாச்சாரம் இந்தியாவிலும் வந்துள்ள நிலையில் தமிழகத்தின் நீலகிரி சாக்லேட் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கொக்கோ மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்படும் பானங்கள் இருந்திருந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்ரன. தொடர்ந்து பல வருடங்கள் மக்கள் நாவில் சாக்லேட்டின் சுவை தங்கி நிற்கிறது என்றால் அதற்கு ஒரே சான்று பரவலாக்கப்பட்ட சாக்லேட் வணிகம்தான். காட்பெரி, நெஸ்ட்லே என ஏராளமான நிறுவனங்கள் சாக்லேட் தயாரிப்பில் முதன்மை வகிக்கின்றன. டார்க் சாக்லேட் அளவோடு எடுத்துக்கொண்டால் இதய நோய்க்குத் தீர்வாக அமையும் என சில மருத்து ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி மக்களின் மகிழ்ச்சி, கொண்டாட்டம், விழாக்கள் என அனைத்தோடும் பின்னிப் பிணைந்து இருக்கும் சாக்லேட்டுகளை அளவோடு உண்போம் மகிழ்வோடு வாழ்வோம்.

இதையும் படிங்க: World Chocolate Day: கசப்பான சாக்லேட் இனிப்பானது எப்படி: வரலாற்றுடன் வணிகமும்!

Last Updated :Jul 8, 2023, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.