குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து; 2 பேர் காயம்

author img

By

Published : Nov 24, 2022, 12:32 PM IST

Updated : Nov 24, 2022, 2:28 PM IST

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தீவிபத்து; இரண்டு பேர் காயம்

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி: குன்னூர், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வெல்டிங் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் நடந்த தீ விபத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து; 2 பேர் காயம்

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுடன் சென்ற அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து

Last Updated :Nov 24, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.