கூடலூரின் பரப்பளவில் 60 விழுககடு அளவு வனப்பகுதியாக உள்ளதால், வருடந்தோறும் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். இதனால் வனப்பகுதிகள் பெருமளவில் எரிந்து சேதமாகிவருகின்றன.
இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் ஏற்படும் கடும் பனிப்பொழிவு மற்றும் பகல் பொழுதுகளில் உண்டாகும் அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள செடிகொடிகள் வாட தொடங்கியுள்ளன.
இதனால் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயகர சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனைத் தடுக்கும் விதத்தில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, பிதர்காடு வனச்சரகத்தில், வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில் இந்த தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றன.
வனங்களின் மையத்திலுள்ள சாலையின் இரண்டு பக்கமும் சுமார் பத்து மீட்டர் நீளத்திற்கு எதிர் தீ வைத்து அதனை அணைத்து வருகின்றனர். இதன் மூலம் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு தீ பரவுவதைத் தடுக்க முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!