ரஷ்யா - உக்ரைன் போர் : நீலகிரியில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

author img

By

Published : Mar 1, 2022, 9:11 AM IST

Updated : Mar 1, 2022, 1:35 PM IST

நீலகிரியில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு தொடர்பான காணொலி

ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலைகளின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச தேயிலை ஏலம் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி கிலோ தேயிலை ரஷ்யாவிற்கும், 1.5 கோடி கிலோ தேயிலையானது உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 40 சதவீதம்வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நீலகிரியில் இருந்து மட்டும் 2 கோடி கிலோ தேயிளைகள் ரஷ்யாவிற்கும், 1 கோடி கிலோ உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நீலகிரியில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு தொடர்பான காணொலி

இந்த வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்தது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிக்கலை களைய ரஷ்யாவின் கரன்சியான ரூபல் மூலம் வர்த்தகத்தை தொடங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இப்பணிகள் நிறைவடைந்தால் ரஷ்யாவிடமிருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், உரம் உள்ளிட்ட பொருட்களை ரூபல் மூலம் பெற்று, அதற்கு ஈடாக தேயிலைகளை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் இந்திய வர்த்தக அமைப்பு ஈடுபட்டுவருவகிறது. இப்பணிகள் விரைந்து முடிந்தால் ஏற்றுமதிக்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

தென்னிந்தியாவில் இருந்து அதிகபட்சமாக ஆர்த்தோடக்ஸ் தேயிலைகள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிகளவு ரஷ்ய மக்கள் விரும்பும் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சிடிசி ரக தேயிலையும் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் தொடரும் பட்சத்தில் தேயிலை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டு பொருளாதார பாதிப்பு ஏற்படும் என தேயிலை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நான் தனி மனிதன் அல்ல; ஒரு கூட்டம்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated :Mar 1, 2022, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.