ETV Bharat / state

தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மாற்றுத்திறனாளி தேர்வு - அரசு உதவி செய்ய கோரிக்கை

author img

By

Published : Mar 15, 2022, 8:57 AM IST

ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி
ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி

பயிற்சி செய்ய தேவையான வசதிகள் செய்து தருமாறு தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மாற்றுத்திறனாளி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

நீலகிரி: கூடலூர் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் பிரியதாஸ். இவர் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறும் பராளிம்பிக் போட்டிகளில் ஈட்டி எரிதல், குண்டு எரிதல், தட்டு எரிதல் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை குவித்துள்ளார்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 2 வெள்ளி பதக்கங்களை வென்றார்.மேலும் இந்த மாதம் இறுதியில் ஓடிசாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி

அவரை நீலகிரி மாவட்ட மக்கள் பாராட்டி வரும் நிலையில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி செய்ய போதிய வசதிகள் இல்லை என்றும் கோவைக்கு சென்று பயிற்சி செய்ய வேண்டி உள்ளதால் அதிக செலவு ஆவதாக தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு நீலகிரி மாவட்டத்திலேயே பயிற்சி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த மனுவுடன் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பிரியதாஸ் மாவட்ட வருவாய் அலுவவவரிடம் மனு அளித்தார்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.