ETV Bharat / state

மலை ரயிலில் புதிய பெட்டிகள்- சோதனை ஓட்டம்

author img

By

Published : May 9, 2022, 7:44 PM IST

புதிய சோதனை ஓட்டம்
புதிய சோதனை ஓட்டம்

நீலகிரியில் குன்னுார்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் புதிய பெட்டிகளுக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.

நீலகிரி மலை ரயிலுக்காக, சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, 28 ரயில் பெட்டிகள் மேட்டுப்பாளையம் இரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. மேட்டுப்பாளையம் - குன்னுார் மலை ரயில்பாதையில், லக்னோ ரயில்வே சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் (RDRC) சார்பில் சோதனை ஓட்டம் இன்று (மே 09) தொடங்கியது.

நீலகிரியில் குன்னுார்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் புதிய சோதனை ஓட்டம்

ரயில் சக்கரங்களில், தொழிற்நுட்பத்துக்கான ஒயர்கள் இணைத்து, சுழற்சி முறை, வேகம் குறித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், 'நீலகிரி மலை ரயிலுக்கு, புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்த பெட்டிகள், 15 நாட்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். தரச்சான்றிதழ் வழங்கிய பின், செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என்று கூறியுள்ளனார்.

இதையும் படிங்க: யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம்: 16ஆவது ஆண்டில் நீலகிரி மலை ரயில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.