ETV Bharat / state

நீலகிரியில் தொடர்மழை எதிரொலி: மலை ரயில் ரத்து

author img

By

Published : Nov 16, 2019, 11:36 AM IST

kunnur

நீலகிாி: மழையின் காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுந்துள்ளதால் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

நீலகிாி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக இரவிலும் பகலிலும் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மண்சாிவு, நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் ஆங்காங்கே பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னுாா் மலை ரயில் பாதையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி இன்று முதல் 20ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து

குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயிலும் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் முதல் ஊட்டி வரை இயங்கும் மலை ரயில் வழக்கம்போல் இயங்கும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு

Intro:நீலகிாி மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை காரணமாக  சுற்றுலா  பயணிகளின்  பாதுகாப்பு கருதி குன்னுாா் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலைரயில்  இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது  தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிாி மாவட்டத்தில்   தொடர் மழை பெய்து வருகிறது இதன் ஆங்காங்கே  மண்சாிவு நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது  இதேபோல் மலை ரயில் பாதையில்  ஆங்காங்கே  பாறைகள் மற்றும் மரங்கள் விழுவதால்  தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது ,  இந்த நிலையில் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில்  மழையின் காரணமாக  பாறைகளுடன் மண்சாிவு  மற்றும் மரங்கள் விழுவதால்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு  கருதி   இன்று ஒரு நாள் குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலைரயிலும்  மேட்டுப்பாளையம் முதல் குன்னுாா் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது   , குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும்  மலைரயில் வழக்கம் போல் இயங்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது






Body:நீலகிாி மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை காரணமாக  சுற்றுலா  பயணிகளின்  பாதுகாப்பு கருதி குன்னுாா் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலைரயில்  இன்று முதல்  20 ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது  தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிாி மாவட்டத்தில் நான்கு நாட்களாக இரவில்  மற்றும் பகலிலும்  பலத்த மழை பெய்து வருகிறது இதன் ஆங்காங்கே  மண்சாிவு நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது  இதேபோல் மலை ரயில் பாதையில்  ஆங்காங்கே  பாறைகள் மற்றும் மரங்கள் விழுவதால்  தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது ,  இந்த நிலையில் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில்  மழையின் காரணமாக  ஆங்காங்கே பாறைகளுடன் மண்சாிவு  மற்றும் மரங்கள் விழுவதால்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு  கருதி   இன்று முதல்  20 ந்தேதி வரை    குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலைரயிலும்  மேட்டுப்பாளையம் முதல் குன்னுாா் வரை இயக்கப்படும் மலை ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது   , குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும்  மலைரயில் வழக்கம் போல் இயங்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.