ETV Bharat / state

Freezing season:நீலகிரியில் உறைபனி சீசன்

author img

By

Published : Dec 25, 2021, 5:10 PM IST

உதகையில் கடும் பனிப்பொழிவு
உதகையில் கடும் பனிப்பொழிவு

Freezing season: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உறைபனி தாக்கம் காணப்படுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Freezing season: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர் பனி, உறை பனி காலநிலை காணப்படும். தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை, குன்னூர் பகுதிகளில் புல்வெளிகளில் உரை பனி படர்ந்துள்ளது. வரும் நாட்களில் உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் குளிர் ஆடைகளைப் போர்த்தியும், தீ மூட்டியும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி

உறை பனியின் தாக்கம் அதிகாலை 10 மணிவரை நீடிப்பதால் கடும் குளிர் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டா மாற்ற தாசில்தாருக்கு லஞ்சம், தனக்கு இச்சை - ஏமாற்றிய சர்வேயர்? - பெண் கண்ணீர் மல்க மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.