ETV Bharat / state

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

author img

By

Published : May 14, 2019, 1:40 PM IST

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி: குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனால்,வனப்பகுதியில் வாழ்ந்துவரும் காட்டு விலங்குகளுக்கு உணவு தண்ணீரின்றி தவித்துவருவதால் அவைகள் குடியிருப்புப் பகுதிகளையும் விவசாய நிலங்களையும் தேடிவருகின்றன.

இந்நிலையில் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள், குன்னூர் அருகேயுள்ள கொலக்கொம்பை டெரேமியா பகுதியில் நுழைந்தன. அந்தப் பகுதியில் ராமசந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.

ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மேலும், காட்டு யானைகள் தற்போது அதே பகுதியில் உலா வருவதால், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பொதுமக்களும் விவசாயிகளும் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

.

Intro:நீலகிரி மாவட்ம்  குன்னூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் |

இந்த ஆண்டு தமிழகத்தில் மழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.இந்த வறட்சி வனப்பகுதியை விட்டு வைக்க வில்லை. இதனால் காட்டு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. இதனால் அவைகள் குடியிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும் தேடி வருகின்றன. இந்த நிலையில் குந்தா வனசரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் வனப்பகுதியிலிருந்து  காட்டு யானைகள் குன்னூர் அருகேயுள்ள கொலக் கொம்பை டெரேமியா பகுதியில்  நுழைந்த. காட் டுயானைகள்  அந்த பகுதியில் உள்ள ராமசந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்தன. அந்த நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பீன்ஸ் பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. பசுமையான பீன்ஸ் பயிர்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தின.  காட்டு யானைகள் தற்போது அதே பகுதியில் உலா  வருகின்றன. எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்களும் விவசாயிகளும் வனத்துறையினருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:நீலகிரி மாவட்ம்  குன்னூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் |

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.