‘பாஜக பிரிவினைவாத அரசியலை நடத்தி வருகிறது’ - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

author img

By

Published : Sep 29, 2022, 9:16 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

பாஜக பிரிவினைவாத அரசியலை நடத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஒற்றுமை பேணுகின்ற வகையில் தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்தி வருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நீலகிரி: கூடலூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (செப்.29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புத்துயிரூட்டியுள்ளது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினரை பெருமளவு பாதிப்படைய செய்துள்ளது. பாஜக பிரிவினைவாத அரசியலை நடத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஒற்றுமை பேணுகின்ற வகையில் தேசிய ஒற்றுமை நடைப் பயணத்தை நடத்தி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதியும் அவர்கள் சாகுபடி செய்யும் தேயிலைக்கு ஆதார விலை வேண்மென ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

கூடலூர் பகுதியில் பல ஆண்டுகளாக வன நிலத்தில் வேளாண் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரை ஒன்பதாயிரம் தொண்டர்கள் ஜனநாயக மரபு படி தேர்ந்தெடுக்கப்படுவார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

“மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் செயல்களில் ஈடுபடும் எந்த அமைப்பு மீதான தடையை காங்கிரஸ் ஆதரிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.174.48 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள்... முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.