ETV Bharat / state

குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்

author img

By

Published : Jan 13, 2020, 8:35 PM IST

நீலகிரி: ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகள் கிடைத்ததால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

local body election
local body election

கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பொன்தோஷ் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார். தமிழ்நாட்டில் தோடர் இன பழங்குடியினர் ஒருவர் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே உதகை, குன்னூர், கோத்திகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த சுனிதா போட்டியின்றி தேர்வானார்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராம்குமார் வெற்றி பெற்றார். கூடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சார்ந்த கீர்த்தனா போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனிடைய உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு தலா 11 வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்சி வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் சமமாக இருந்ததால் சீட்டு குலுக்க தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்

அதனையடுத்து இரண்டு கட்சி வேட்பாளர்களின் பெயர் சீட்டில் எழுதப்பட்டது. அதனையடுத்து அர்ச்சனா என்ற குழந்தை அங்கு அழைத்து வரப்பட்டு குலுக்கி சீட்டை எடுக்க வைக்கபட்டது. அதில் அதிமுக வேட்பாளர் மாயன் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: நிலச்சரிவை தடுக்க அரிய வகை புல் - குன்னூரில் புதிய முயற்சி

Intro:OotyBody:
உதகை 11-01-20
குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்.

கடந்த மாதம் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்று கொண்டனர். அதில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி ஒன்றி தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சிமன்ற துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுகவை சார்ந்த பொன்தோஷ் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார். தமிழகத்தில் தோடர் இன பழங்குடியினர் ஒருவர் மாவட்ட ஊராட்சிதலைவராக தேர்வு ஆகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே உதகை, குன்னூர், கோத்திகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகாவை சார்ந்த சுனிதா போட்டியின்றி தேர்வானார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகாவை சார்ந்த ராம்குமார் வெற்றி பெற்றார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகாவை சார்ந்த கீர்த்தனா போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனிடைய உதகை ஊராட்சி ஒன்றி தலைவருக்கான தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு தலா 11 ஓட்டுகள் வீதம் பதிவானது. 2 கட்சி வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் சமமாதால் சீட்டு குலுக்க தேர்வு செய்ய முடிவு செய்யபட்டது. அதனையடுத்து இரண்டு கட்சி வேட்பாளர்களின் பெயர் சீட்டு எழுத்தபட்டது. பின்னர் அர்ச்சனா என்ற குழந்தை அங்கு அழைத்து வரபட்டு குலுக்கி சீட் எடுக்க வைக்கபட்டது. அதில் அதிமுக வேட்பாளர் மாயன் வெற்றி பெற்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.