நீலகிரி: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து கொள்ள 22 வட இந்திய நபர்கள் ஒரு சுற்றுலா வேனில் ஊட்டியில் இருந்து கூடலூர் சாலையில் பயணம் செய்தனர். அப்போது, மேல் கூடலூர் பகுதியில் நிலை தடுமாறி வேன் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடலூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 13 பேரை காயங்களுடன் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மீதமுள்ள நபர்கள் வெளி நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஊட்டி - கூடலூர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பின்பு கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த வேனை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இது குறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஐபிஎல் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களின் புல்லட்டை குறிவைத்து திருடும் கும்பல்... சிக்கியது எப்படி?