ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடாக 7,150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' - அமைச்சர் துரைக்கண்ணு!

author img

By

Published : Dec 5, 2019, 6:39 PM IST

பட்டுகோட்டை சிறப்பு குறை தீர்ப்பு முகாம்  பட்டுக்கோட்டை குறை தீர்ப்பு அமைச்சர் துரைக்கண்ணு  தஞ்சாவூர் மாவட்டச் செய்திகள்  Most of the crop insurance provided in Tamil Nadu said by agri minister duraikannu  crop insurance amount  agri minister duraikannu
agri minister duraikannu

தஞ்சாவூர்: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பயிர்க்காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு அதிகப்படியாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பான உதவிகள், புதிய குடும்ப அட்டை மற்றும் வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட 1 கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்வில் பேசிய அவர், 'தமிழ்நாடு அரசு தற்போது பொங்கல் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அதுபோல அனைத்துப் பகுதியிலும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு எல்லா ஏரி குளங்களிலும் நீர் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், அதிகளவில் சுமார் 7 ஆயிரத்து 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடாக 7,150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் துரைக்கண்ணு

இது தவிர எண்ணற்ற உதவிகளை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதனை தமிழ்நாடு மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: திமுகவில் இணைந்த பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார்!

Intro:இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் ருபாய் ஏழாயிரத்து நூற்றி ஐம்பது கோடி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது-பட்டுக்கோட்டை யில் நடைபெற்ற அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


Body:பட்டுக்கோட்டையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பான உதவிகள் ,புதிய குடும்ப அட்டை மற்றும் வேளாண் உபகரணங்கள் ஆகிய ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சத்து ஐம்பது ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் அவர் பேசும்பொழுது தமிழக அரசு தற்போது பொங்கல் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. இதுபோல அனைத்து பகுதியிலும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு எல்லா ஏரி குளங்களிலும் நீர் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு பயிர் காப்பீட்டுத் தொகை ரூபாய் 7150 கோடி ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர எண்ணற்ற உதவிகளை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தமிழக அரசு செய்து வருகிறது. இதனை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் எம்பி வைத்திலிங்கம் எம்எல்ஏ சேகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.