ETV Bharat / state

மேகதாது அணை விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

author img

By

Published : Jun 9, 2023, 11:54 AM IST

மேகதாது அணை பிரச்சனையில் தமிழக முதல்வர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி
மேகதாது அணை பிரச்சனையில் தமிழக முதல்வர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி

மேகதாது அணை பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

மேகதாது அணை பிரச்சனையில் தமிழக முதல்வர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், "97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்தும், குறுவை நெல் சாகுபடிக்கு 7182 மெட்ரிக் டன் விதை நெல் தேவைப்படுவதால் விதை நெல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர், விவசாயிகளின் கருத்துக்களை அமைச்சர்கள் கேட்டறிந்தனர், நீண்ட நேரமாக நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார், அதில் குறுவைப் பருவத்தில் 2022 ஆம் ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் சாகுபடி பரப்பு அதிகரித்தது.

மேலும், நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் எனவும். இதற்காக 4 ஆயிரத்து 45 டன்கள் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும் 4 ஆயிரத்து 46 டன்கள் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதேபோல் யூரியா, டிஏபி போன்ற உரங்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 289 டன்கள் கையிருப்பில் உள்ளன. அறுவடை செய்த நெல்கொள்முதல் செய்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குருவை சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய 238 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அணை கட்டுவதை தடுப்பார் என்று உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், "கடந்த ஆண்டு விவசாய கடன் 12 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 13 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு விவசாய கடன் 14 ஆயிரம் கோடிக்கு வழங்குமாறு தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த தாய்.. எப்படி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.