ETV Bharat / state

Jailer release: தஞ்சையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

author img

By

Published : Aug 10, 2023, 5:32 PM IST

jailer movie celebration in thanjavur
தஞ்சையில் ஜெயிலர் பட கொண்டாட்டம்

தஞ்சாவூரில் உள்ள விஜயா திரையரங்கில் ஜெய்லர் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

தஞ்சையில் ஜெயிலர் பட கொண்டாட்டம்

தஞ்சாவூர்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள "ஜெயிலர்" திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள், திரையரங்குகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், இப்பத்தின் வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாநகரில் உள்ள விஜயா, சாந்தி, கமலா, ராணி பேரடைஸ் ஆகிய 4 திரையரங்கங்களில் காலை 9 மணிக்கு ஜெயிலர் படம் வெளியானது. இதனை முன்னிட்டு திரையரங்க வாயிலில் திரண்ட ரசிகர்கள், திரையரங்க வளாகத்தில் ரசிகர்களுக்கு இனிப்பு கொடுத்தும், திரையரங்க வாசலில் பட்டாசு வெடித்து, பறை இசைத்தும் ஜெயிலர் திரைப்பட வெளியீட்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சை மாநகரப் பகுதிகளில், ஜெயிலர் படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த நரிக்குறவர் இன மக்கள் ஃபிளெக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், சூடம் ஏற்றியும், சிதறு தேங்காய் உடைத்தும், வெடி வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தஞ்சை விஜயா திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.

இதனால் காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் 'ஜெயிலர்' படத்தைக் காண திரையரங்குகள் முன்பு குவிந்தனர். முன்னதாக தஞ்சை மாவட்டத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட் அவுட் படத்திற்கு ரசிகர்கள் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

மேலும் திரைப்படம் பார்க்க முதலில் வந்த 4 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக அயன் பாக்ஸ்சை வழங்கினார், தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசன். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரஜினி கணேசன் கூறும்போது, "இந்தப் படத்தின் இயக்கம் பிரமிக்க வைத்துள்ளது. படத்திற்கு ஆரவாரம் இல்லாமல் விளம்பரப் பலகை இல்லாமல், ஒரு சில ஃபிளெக்ஸ் பேனர் மட்டுமே திரையரங்கின் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மதித்து அதிக ஃபிளெக்ஸ் பேனர் வைக்காமல் உள்ளோம்" என்று கூறினார்.

மேலும், ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சரித்திரம் படைக்கும் என்றும், சுமார் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை தொடரும் என்றும் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவியாக அயன் பாக்ஸ் வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து ராசா மிராசுதார் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்கள் உடன் இருப்பவர்கள் என சுமார் 500 நபர்களுக்குப் பிரியாணி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆல்பர்ட் திரையரங்கில் காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரசிகர்கள் - ஜெயிலர் ரிலீசுக்கு ரசிகர்கள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.