ETV Bharat / state

டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது - அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Jul 23, 2023, 6:32 PM IST

Updated : Jul 24, 2023, 6:54 AM IST

டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது - அமைச்சர் கே.என்.நேரு
டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது - அமைச்சர் கே.என்.நேரு

ஜூலை 27ஆம் தேதி தஞ்சாவூரில் ரூ. 140 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வுப்பணிகளை பார்வையிட்டார்.

டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது - அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வரும் ஜூலை 27ஆம் தேதி, 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 14 கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தை நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூலை 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

வரும் ஜூலை 26ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர் கூட்டத்தில் பங்கேற்க வருகிரார். பின்னர் ஜூலை 27ஆம் தேதி காலை திருச்சியில் விவசாயிகள் சங்கமம் எனும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுவரை இந்த கண்காட்சியை தனியார் நடத்தி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்த கண்காட்சியை அரசாங்கம் எடுத்து நடத்த உள்ளது. இதில் விவசாயிகளுக்கு நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்ய உதவும் இயந்திரங்களை காட்சிப்படுத்த உள்ளனர். இதனை முதலமைச்சர் திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.

இதைத் தொடர்ந்து தஞ்சையில் மாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையம், மாநாட்டு அரங்கம், அறிவியல் பூங்கா, மாநகராட்சிப் பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக மாற்றுதல், நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் அமைக்கும் பணி, சூரிய ஒளி மின் நிலையம் அமைத்தல், கருணா சுவாமி குளம் மேம்படுத்தும் பணி, காந்திஜி வணிக வளாகத்தை மேம்படுத்தும் பணி, ராஜகோரி மயானத்தில் எரிவாயு தகன மையம் அமைத்தல், அழகி குளம் மேம்படுத்தும் பணி உள்ளிட்ட ரூ 140 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 14 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ''வல்லம் குவாரி சாலைக்கு ‘தமிழ் சாலை’ என முதலமைச்சர் பெயர் சூட்டவுள்ளார். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டது. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கிறது.

டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அந்தப் பணிகள் முடிந்து விடும்'' என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கும்மியாட்ட கலை நடைபெற அதிமுக உறுதுணையாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

Last Updated :Jul 24, 2023, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.