தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை தானம் கொடுத்தால் வரவேற்போம் - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Jan 23, 2023, 11:04 PM IST

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு யானை தானம்; நன்கொடையாளர்களுக்கு அறநிலையத்துறை வரவேற்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு யானையை தானமாக வழங்க நன்கொடையாளர்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு யானை தானம்; நன்கொடையாளர்களுக்கு அறநிலையத்துறை வரவேற்பு

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் மஹா சிவராத்திரி விழா நடத்துவது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தஞ்சை திலகர் திடல் மற்றும் பெத்தண்ணன் அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 5 திருக்கோவில்களில் மஹா சிவராத்திரி விழா கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட உள்ளது என்றார்.

மேலும், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை இல்லாத நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இந்திய வனத்துறை சட்டத்தின் படி யானையை காட்டில் இருந்து நாம் கொண்டு வந்து வளர்க்க கூடாது. நன்கொடையாளர்கள் யாராவது யானையை கொடுத்தால் கோயிலில் வளர்ப்பதற்கு தயாராக உள்ளோம் என்றும் நன்கொடையாளர்களை யானையை தானமாக கொடுப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை வரவேற்க காத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் 40க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் படி 40 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்பி கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் உள்ளிட்ட அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வேலூர் நாட்டிய சங்கமம் 2023: மாணவி பிரணவதிக்கு முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள 'வைரம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.