விரல்ரேகை நிபுணர் தேர்வு - தஞ்சை சப் - இன்ஸ்பெக்டர் முதலிடம்

author img

By

Published : Nov 30, 2022, 6:32 AM IST

Etv Bharatஅகில இந்திய அளவிலான விரல்ரேகை நிபுணர் தேர்வு - தஞ்சை சப் இன்ஸ்பெக்டர் முதலிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப் - இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் காவல்துறையின் தனிவிரல் ரேகை கூடத்தில் பெண் சப் - இன்ஸ்பெக்டர் ஆக அமலா (27)என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் அகில இந்திய அளவில் கைரேகை நிபுணர் தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் அகில இந்திய அளவில் 226 பேரும் தமிழ்நாட்டில் 174 பேரும் தேர்வு எழுதினர்.

இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த அமலா என்பவர் சிறுவயதிலேயே தேர்ச்சி பெற்று முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து தஞ்சை சரக காவல் டிஐஜி கயல்விழியை சந்தித்து பாராட்டு பெற்றார். இந்தத் தேர்ச்சியின் மூலம் கைவிரல் ரேகை நிபுணர் என சான்று வழங்கப்படும்.

அகில இந்திய அளவிலான விரல்ரேகை நிபுணர் தேர்வு - தஞ்சை சப் இன்ஸ்பெக்டர் முதலிடம்

கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது 11 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் அமலா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற சப் இன்ஸ்பெக்டரை உடன் பணியாற்றும் போலீசாரும் பாராட்டினர்.

இதையும் படிங்க:நெல் கொள்முதலில் ரூ.8 கோடி முறைகேடு: விஏஓ, திமுக நிர்வாகிக்கு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.