ETV Bharat / state

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 6:17 PM IST

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

Sankarankovil Municipality President: சங்கரன்கோவில் நகராட்சி மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பால் அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி: சங்கரன்கோவிலில் நகராட்சி 30 வார்டு பகுதிகளைக் கொண்டதாகும். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகர்மன்ற தலைவர் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யத் தவறிய நிலையில், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மீது 22 நகர்மன்ற உறுப்பினர்கள், கடந்த மாதம் 9ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் இன்று (07.12.2023) நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் எனவும், நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், இன்று (டிச.07) சங்கரன்கோவில் நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் போதிய அளவில் நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் இன்று நடைபெற இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு தோல்வியுற்றதாக நகராட்சி ஆணையாளர் சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, நகராட்சி ஆணையாளர் மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து 13 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்குச் சென்ற சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் தலைமையிலான காவல்துறை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனையடுத்து, நகர மன்ற துணைத் தலைவர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்யத் தவறிய நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கையெழுத்திட்ட திமுக நகர மன்ற உறுப்பினர்களே பணத்திற்காகவும், மக்களின் தேவைகளைப் புரியாமல் தற்போது அடிமையாக சென்று உள்ளதாகக் கூறினார். விரைவில் மக்களைத் திரட்டி நகர்மன்ற தலைவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்" பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த திமுக பிரமுகர் கைது.. தென்காசியில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.